டிஜிட்டல் கல்வி கற்ற பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடல்
டிஜிட்டல் கல்வி கற்ற பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடிய நிகழ்ச்சி மாவட்ட பொது சேவை மையங்களில் ஒளிபரப்பப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமபுறங்களில் 200-க்கும் மேற்பட்ட பொதுசேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பொது சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் சேவைகள், பணப்பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் கல்வி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி டிஜிட்டல் கல்வி கற்ற பயனாளிகளிடம் நேற்று தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சி அனைத்து பொது சேவை மையங்களிலும் டிஜிட்டல் கல்வி கற்போர் பார்வையிட்டனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட பொதுசேவை மைய மேலாளர் செபஸ்டீன் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் டிஜிட்டல் கல்வி கற்க, 9 ஆயிரத்து 858 பேர் பதிவு செய்துள்ளனர். டிஜிட்டல் கல்வியின் அடிப்படை ஸ்மார்ட் செல்போன்கள் பயன்பாடு, ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகள், இன்டர்நெட் பயன்பாடு குறித்து கற்பிக்கப்படுகிறது. இக்கல்வி கற்று, தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 557 பேர் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
இதே போல், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வீட்டிற்கு ஒருவருக்கு கட்டாயம் டிஜிட்டல் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிஜிட்டல் கல்வி கற்ற பயனாளிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தமிழகத்தில் மயிலாடுதுறையில் உள்ள பொதுசேவை மையத்தில் பயனாளிகளிடம் தமிழில் பேசினார். இந்த நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுசேவை மையங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை டிஜிட்டல் கல்வி கற்ற பயனாளிகள் பார்வையிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.