ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி தலைமையில், மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் தி.மு.க.வினர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம் மற்றும் அ.தி.மு.க.வினர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர்.
அ.ம.மு.க. மாவட்டசெயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் தலைமையிலான அ.ம.மு.க.வினரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர்.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும், பாலாஜி நகரிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
கண்ணமங்கலம் குளத்துமேடு அருகே உள்ள மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.