ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
திருச்சியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
திருச்சி,
முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளில் முதன்மையானது ரம்ஜான். திருச்சியில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். புத்தாடை அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன், ஆற்காடு அறக்கட்டளை நிர்வாக அதிகாரி நவ்ஷாத், மக்கள் தொடர்பாளர் முகமது அப்துர் ரசாக், முஸ்லிம் இலக்கிய மன்ற தலைவர் கவிஞர் சையது ஜாபர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வந்திருந்த மதகுரு சிறப்பு தொழுகையை நடத்தினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகமது ரபீக், ம.ம.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார்கள். த.மு.மு.க. மாநில பொருளாளர் ஷபியுல்லா கான், நூர்தீன் சிறப்புரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
சுப்பிரமணியபுரம் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பாக ஜெயில்கார்னர் பகுதியில் பொன்மலைப்பட்டி மெயின்ரோடு அருகில் சிறப்பு தொழுகை அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதேபோல் மார்க்கெட் பேகம் பள்ளிவாசல், சவுக் முகமதியா பள்ளிவாசல், பீரங்கி குளத்தெரு அமீர் மஸ்ஜித் உள்பட திருச்சி நகரில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 39 மற்றும் 40-வது வார்டு சார்பில் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹசான் இமாம் ஏழை எளியோருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கினார்.