விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: தோட்டத்தில் சமையல் செய்து சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்
விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் சமையல் செய்து சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் அருகே விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தில் சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்கார் மாநிலம் ராய்கரில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வரை உயர் மின்கோபுரம் அமைத்து, மின்கம்பிகள் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்கப்படுகிறது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் வழியாக பெரிய கூத்தம்பட்டி, சின்ன கூத்தம்பட்டி, செட்டிகொள்ளை, தலையன்கொட்டாய், தேவிரஹள்ளி, குடிமேனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் அமைக்க வருவாய்த்துறையினர், விவசாயிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் குறிப்பிட்ட சில கிராமங்களில் விவசாயிகளிடம் அனுமதி பெற்று உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மின்கோபுரம் அமைக்க குடிமேனஅள்ளி, தேவிரஅள்ளி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே விவசாயிகளுக்கு தெரியாமல், நிலங்களில் வருவாய்த்துறையினர் அளவீடு பணிகள் மேற்கொண்டு வருவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி போலீஸ் பாதுகாப்புடன் குடிமேனஅள்ளி கிராமத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது, உயர்மின் கோபுரம் அமைய உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு திட்டங்களுக்காக எந்த நிலத்தையும் கையப்படுத்தலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கிருந்த பெண்கள், விவசாயிகள் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது, நிலத்திற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளை மட்டுமே உதவி கலெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார். மேலும் 4 பேரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை குடிமேனஅள்ளி கிராமத்தில் மின்கோபுரம் அமைக்க நிலத்தை அளவீடு செய்ய, போச்சம்பள்ளி தாசில்தார் கோபிநாத் தலைமையில், வருவாய்த்துறையினரும், பவர்கீரிட் அலுவலர்களும் சென்றனர். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), அர்ஜூனன் (ஊத்தங்கரை) ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றனர்.
மேலும் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர். இதனை கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் விவசாயிகள் பலர் தங்களது குடும்பத்தினருடன் கூடியிருந்தனர்.
இதனால் சிறிது நேரத்திற்கு பிறகு நிலத்தை அளக்காமல் அதிகாரிகளும், போலீசாரும் அங்கிருந்து திரும்பி சென்றனர். ஆனாலும் நிலத்தை அளக்க அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால் விவசாயிகள் தங்களது குழந்தைகளுடன் அங்குள்ள தென்னந்தோப்புகளில் தங்கி உள்ளனர். அவர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக குடிமேனஅள்ளி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.