மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்
ஜெயங்கொண்டம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கலந்தாய்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த குருவாலப்பர்கோவில் கிராமத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் தொடர்பாக மக்கள் பாதுகாப்பு குழு சார்பில் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் (தெற்கு) மணிமாறன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த உத்திராபதி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு மணிவேல் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னத்துரை பேசியதாவது:-
விவசாயத்தையும், விளைநிலத்தையும் பாழ்படுத்தி நிலத்தடி நீரை மாசுபடுத்திடும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மும்முரமாக முயற்சி செய்து வருகிறது. அதன்படி குருவாலப்பர்கோவில், வீரசோழபுரம், விழப்பள்ளம், கரைமேடு, சோழன்குறிச்சி, தேவாமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான அடிதூரம் துளையிட்டு சேல்கேஸ் என்கிற மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கும் பணிக்காக தயார் நிலையில் வைத்துள்ளது.
இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறையும், நீர்மாசுபட்டு குடிநீர் பஞ்சம் ஏற்படும், விவசாய விளை நிலங்கள் அழிந்து போகும், இப்பகுதியே பாலைவனமாகும், சோமாலிய வாழ்குடி மக்கள் போல் உண்ண உணவின்றி வறுமையோடு வாழக்கூடிய அபாயகரமான நிலைமையை மக்கள் சந்திக்க உள்ளார்கள் என்பதை இப்பகுதி மக்கள் நன்கு அறிந்து விழிப்புணர்வோடு இருக்கின்றனர்.
இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என்பது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்த்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்து வருகிறோம். கங்கைகொண்டசோழபுரம் பகுதி உலக யுனஸ்கோ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வரலாற்று பொக்கிஷங்கள் உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறவே கைவிட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இதை மீறி இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்தால் தூத்துக்குடி, நெடுவாசல், கதிராமங்கலம் போன்று கடுமையான போராட்டங்களை நடத்த தயங்கமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வெங்கடாசலம், தி.மு.க. நிர்வாகிகள் குலோத்துங்கன், பிரிதிவிராஜன் மற்றும் விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.