ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஊழியர்களுக்கு பதவி உயர்வு: சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊழியர்களின் பதவி உயர்வு குறித்த சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இதை பரமேஸ்வர் வரவேற்றுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் குறைந்த பணி மூப்பு உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இதனால் பதவி உயர்வு பெற்ற ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர்.
அந்த ஊழியர்களின் நலனை காக்கும் விதத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை உருவாக்கியது. இதற்கு அனுமதி கேட்டு கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த மசோதாவை ஆய்வு செய்த கவர்னர், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அந்த சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசு துறைகளில் பணியாற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட மசோதா இயற்றப்பட்டது. அந்த மசோதா கர்நாடக இருசபைகளிலும் ஒப்புதல் பெற்று கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை கவர்னர், ஜனாதிபதிக்கு அனுப்பினார். அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதை நான் வரவேற்று மகிழ்கிறேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி ஊழியர்களின் மத்தியில் நிலவி வந்த அச்சப்போக்கு நீங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.