பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் திரும்பி சென்றனர்

விடுமுறை பற்றிய தகவல் தெரியாததால் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

Update: 2018-06-15 23:28 GMT
சேலம்,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும். அதேபோன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 15-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று அரசு அறிவித்தது. பின்னர் 16-ந்தேதி ரம்ஜான் பண்டிகை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதில் குழப்பம் ஏற்பட்டது. 15-ந்தேதி (நேற்று) பள்ளிகளுக்கு விடுமுறையா? இல்லையா? என்பதில் மாணவ-மாணவிகள் சந்தேகம் அடைந்தனர். இதனால் சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உள்ளிட்ட ஒரு சில பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளிக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரியிடம் கேட்ட போது, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 15-ந்தேதி விடுமுறை என்று அரசு அறிவித்தது. இதனால் அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பின்னர் மாலையில் 16-ந்தேதி ரம்ஜான் என்று அறிவிக்கப்பட்டது.
15-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவல் பெரும்பாலான மாணவ-மாணவிகளுக்கு தெரியவில்லை. இதனால் ஒரு சில பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் பள்ளி விடுமுறை என்றதும் திரும்பி சென்று விட்டனர். சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தன என்று கூறினார்.

மேலும் செய்திகள்