ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் ரூ.5½ கோடியில் விரிவாக்கப்பணி
ஈரோடு- கரூர் சாலையில் ரூ.5½ கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.
கரூர்,
கரூர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஈரோடு- கரூர் சாலையில் ரூ.5½ கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு சாலையோரமாக உள்ள பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு சிறிது தூரம் தள்ளி புதிய மின்கம்பம் நடும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஈரோடு- கரூர் மாநில நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் போக்குவரத்தினை எளிமைபடுத்தும் விதமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் சி.ஆர்.ஐ.டி.பி. என்கிற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5½ கோடி மதிப்பீட்டில் கரூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அங்கு சாலை விரிவாக்கப்பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதையொட்டி சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு ஜல்லிகற்கள், கிராவல் மண், சிமெண்டு கலந்த கலவையை அதனுள் போட்டு சாலை விரிவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அந்த சாலையின் இருபுறமும் உள்ள பழைய மின்கம்பங்களை அகற்றும் பணியில் மின்சார வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக புதிதாக மின்கம்பங்களை தயார் நிலையில் வைத்து கொண்டு உடனுக்குடன் மின் வயர்களை மாற்றி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் அவ்வப்போது மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது. பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் சீரான நிலையில் இருக்கும் என மின் வாரியத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில், கரூர் பாலிடெக்னிக் அருகில் இருந்து கோதூர் பிரிவு ரோடு வரையிலும், உழைப்பாளி நகரில் இருந்து ஆத்தூர் சோழியம்மன் கோவில் ரோடு வரையிலும் விரிவாக்கப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. சாலையோரம் பள்ளம் தோண்டப்படும் இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு விபத்துகளை தடுக்கும் பொருட்டு தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளம் தோண்டும் போது ஏற்கனவே அங்குள்ள சில குடிநீர் தொட்டிகள் சேதமடைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தொட்டிகள் அகற்றப்பட்ட போதிலும் அதற்கு மாற்றாக வேறு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்கும் வகையில் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்த விரிவாக்கப்பணிக்காக ஏற்கனவே அங்கிருந்த புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் சில அகற்றப்பட்டு விட்டன. மரக்கன்று நடுவதில் கவனம் செலுத்தும் மாவட்ட நிர்வாகம் இதனையும் கவனத்தில் எடுத்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. எனினும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, விரிவாக்கப் பணிகளையொட்டி அகற்றப்படும் மரங்களுக்கு மாற்றாக மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அந்த சாலையிலிருந்து சிறிது தூரம் தள்ளி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். மேலும் விரைவில் ஈரோடு- கரூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அங்கு தடுப்புச்சுவர்கள் அமைத்து பணிகள் நிறைவடைந்து விடும் என தெரிவித்தனர்.
கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் இருந்து ஈரோடு ரோட்டிற்கும், ஈரோடு ரோட்டிலிருந்து கரூர் நோக்கியும் அதிகளவு வாகனங்கள் செல்வதால் ஈரோடு-கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கபணி பகுதிகளில் தனியாக போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரை நியமித்து விபத்துகள் ஏதும் ஏற்படாத வகையில் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் நொடிப்பொழுதில் சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்தால் உயிரிழப்பு என்பதை தவிர்க்க முடியாமல் போய்விடும். மேலும் சாலை விரிவாக்கப்பணி பகுதிகளில் கூடுதலாக இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து போக்குவரத்தினையும் ஒழுங்குபடுத்த போலீஸ்துறை முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.