மணல் கடத்தல்; 7 பேர் கைது மாட்டு வண்டிகள் பறிமுதல்
மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம்,
சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தப் படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் சூனாம்பேடு அடுத்த வெள்ளகொண்டாகரம் ஆற்றுப்பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது சூனாம்பேடு அடுத்த வில்லிவாக்கத்தை சேர்ந்த மணி (வயது 50), சுரேஷ் (38), ஜெயமூர்த்தி (47), தணிகைமணி (32), தண்டபாணி (35), கண்ணன் (30), ராமன் (20) ஆகியோர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து மணலுடன் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.