கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை

கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது33), இவரது கணவர் பழனி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

Update: 2018-06-15 22:30 GMT
வண்டலூர்,

கணவரின் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரது மனைவி வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த மனைவி ஜெயந்தி கடந்த 10-ந்தேதி வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஜெயந்தி உயிரிழந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்