நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம்: அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்
திருவாரூரில் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
திருவாரூர்,
டெல்டா மாவட்டத்தில் முதன் முறையாக கூட்டுறவுத்துறையின் கீழ் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் வாய்ப்பை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மத்திய அரசின் ஆதார விலை, தமிழக அரசின் ஊக்கத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
திருவாரூர் கூட்டுறவு நுகர்வோர் பண்டக சாலையானது இந்த மாவட்டத்தில் உள்ள 138 இணைப்பு சங்கங்களுடன் இணைந்து 602 முழு நேர நியாய விலைக்கடைகளுக்கும், 114 பகுதி நேர கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான நகர்வு பணியினை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், இந்தியன் ஆயில் கழக விற்பனை அதிகாரி சரில்சாஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் விஸ்வநாதன், அர்ச்சுனன், மூர்த்தி, மணிகண்டன், துணைப்பதிவாளர் ஜீவா, சோழ இந்து நாடார் சங்க தலைவர் தம்பிராஜ், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் எஸ்.வி.டி.கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டக சாலை தலைவர் கலியபெருமாள் வரவேற்றார். முடிவில் துணை பதிவாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
முன்னதாக திருவாரூரில் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாததால் எந்த பணிகளும் தொய்வடையவில்லை. வங்கி செயலாளர்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. மேட்டூர் அணையில் தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை. நீர்மட்டம் உயர்வை பொறுத்து அணை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டசபையில் தி.மு.க.வுக்கு கேள்வி நேரமாக இருந்தாலும் பேசுவதற்கு உரிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்படுகிறது. ஆனால் தி.மு.க.வினர் நொண்டி சாக்கு கூறி வெளிநடப்பு என்ற நாடகத்தை நடத்துகின்றனர். இது மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
திருவாரூர் அண்ணா சதுக்கம் அருகில் கூட்டுறவுத்துறையின் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார்.
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் காமராஜ் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-