20 அடி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மாணவன் சாவு

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க பணிக் காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் இறந்தான்.

Update: 2018-06-15 23:15 GMT
திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த எண்ணூர், சின்ன குப்பத்தை சேர்ந்தவர் ரஜினி, மீனவர். இவரது மகன் கவிநேசன் (வயது 8), அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை வழக்கம்போல் கவி நேசன் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினான்.

பின்னர் கவிநேசன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சென்றான். அங்கு அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக தண்ணீர் எடுக்க தோண்டப்பட்ட 20 அடி பள்ளம் உள்ளது. அதில் குட்டைபோல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கவிநேசன் அதில் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடித்து விளையாடியபோது சேற்றில் சிக்கிக்கொண்டான். இதனை பார்த்த அவனது நண்பர்கள் ஓடிச்சென்று பெரியவர்களை அழைத்து வந்தனர். அதற்குள் கவிநேசன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்