காயல்பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை திரளானவர்கள் பங்கேற்பு

காயல்பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-06-15 21:00 GMT

ஆறுமுகநேரி, 

காயல்பட்டினத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகை

காயல்பட்டினம் கடற்கரையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் மற்றும் காயல்பட்டினம் அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிவாசல் சார்பில், ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று காலையில் நடந்தது. பள்ளிவாசல் இமாம் நைனா முகமது சிறப்பு தொழுகையை நடத்தினார். பள்ளிவாசல் முன்னாள் துணை கத்தீபு நூகு அல்தாபி குத்பா பேரூரை நிகழ்த்தினார்.

பள்ளிவாசல் தலைவர் அபுல்ஹசன் கலாமி, செயலாளர் நவாஸ் அகமது, துணை தலைவர்கள் முகமது அபுபக்கர், இபுனு சவூது, அமானுல்லா ஹாஜி, துணை செயலாளர் புகாரி, பொருளாளர் ஹசன், த.மு.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் ரபீக் அகமது, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஷாஜகான், முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் வாஹித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் முர்ஷீத் மற்றும் சுமார் 2 ஆயிரம் பெண்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். ஏழைகளுக்கு பித்ரா அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஏழைகளுக்கு வழங்குவதற்காக ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 148 மற்றும் ஒரு ஜோடி தங்க கம்மல் வசூல் செய்யப்பட்டது. தொழுகை நடத்துவதற்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்