கோவையில் நொய்யல் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நீரோடைகள் தூர்வாரப்படாததால் குளங்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
பேரூர்,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கோவை நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்துள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர். காந்திபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.
மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் நேற்று அவதியடைந்தனர். செல்வபுரம் தில்லைநகர், சரோஜினி நகர் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கோவையின் நீர் ஆதாரமாக விளங்கும் 24 குளங்களுக்கு ஓரளவு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இளைஞர்கள் நீச்சல் அடித்து மகிழ்ந்தனர். சித்திரைச்சாவடி அணைக்கட்டு அருகே வலது ஓரத்தில் ராஜவாய்க்கால் மூலம் பிரிக்கப்படும் தண்ணீர் நொய்யல் கிளை வாய்க்கால் மூலம் வேடப்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு குளங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போது அணைக்கட்டின் ஓரம் பிரிக்கப்படும் ராஜவாய்க்கால் மதகுகள் அருகே ஏராளமான அடைப்புகள் உள்ளது. இதனால் மதகுகள் திறக்கப்பட்டிருந்தாலும் வேடப்பட்டி பகுதி குளங்களுக்கு செல்லும் தண்ணீர் முழுமையாக செல்லாமல் பிரதான நொய்யல் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் நொய்யல் ஆற்றின் இரண்டாம் அணைக்கட்டான குனியமுத்தூர் அணைக்கட்டிலிருந்து பிரிக்கப்படும் வாய்க்காலில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டிருந்தாலும் அணைக்கட்டின் மையப்பகுதியில் ஏராளமான மூங்கில் மற்றும் பெரிய மரங்கள் அடித்து வரப்பட்டு மையப்பகுதியிலேயே நிற்கிறது. இந்த மரங்களை அப்புறப்படுத்தினால் சீரான அளவு தண்ணீர் குளங்களுக்கு செல்லும் நிலை உருவாகும்.
வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையடிவார பகுதியில் உருவெடுக்கும் ஓடை மற்றும் வைதேகி நீர்வீழ்ச்சி பகுதியில் உருவெடுக்கும் ஓடைகளும் இணைந்து நரசீபுரம் புதுக்காட்டு வாய்க்கால் வழியே பாய்ந்து ஏழுவாய்க்கால் பகுதியில் இணைகிறது. இதனால் நரசீபுரம் ஊராட்சி மற்றும் போளுவாம்பட்டி ஊராட்சியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் அதிகப்படியான தண்ணீர் கோட்டைக்காடு அருகே செல்லும் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. ஆனால் நரசீபுரம் புதுக்காட்டுவாய்க்கால் முன் ஏற்பாடாக தூர்வாராததால் குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏழுவாய்க்கால் பிரியும் பகுதியில் ஏராளமான அடைப்புகளும், புதர்மண்டியும் காணப்படுகிறது. இதனால் எதிர்பார்த்த தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
குளங்களுக்கு செல்லும் அடைப்பை ஆங்காங்கே அகற்றப்பட்டது போல் முக்கியமான வாய்க்காலுக்கு வரும் தண்ணீரை வீணாக்காமல் விவசாயத்துக்கு பயன்படுத்தியும், நொய்யல் ஆற்றில் கலக்கச்செய்து குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து நரசீபுரத்தை சேர்ந்த மூத்த விவசாயி கந்தசாமியிடம் கேட்டபோது கூறியதாவது:- நரசீபுரம் புதுக்காட்டு வாய்க்கால் தூர்வாரப்படாததால் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உருவெடுக்கும் ஓடைகள் இந்த வாய்க்கால் வழியே செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தண்ணீர் போளுவாம்பட்டியில் உள்ள ஏழுவாய்க்கால் வரை சென்று அப்பகுதியில் பாசன வசதிக்கு உபயோகமாகிறது. அதிகப்படியான தண்ணீர் அங்குள்ள நொய்யல் ஆற்றில் கலந்து குளங்களுக்கு செல்லும். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குளங்களை கண்காணிக்கும் பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:- நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீர் மூலம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறதா? என்று கண்காணிக்கப்படுகிறது. அடைப்புகனை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை வெள்ள அபாயம் ஏற்படவில்லை. இருந்தாலும் பொதுமக்கள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிவரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:- பீளமேடு விமான நிலையம்-1, மேட்டுப்பாளையம்-2, பொள்ளாச்சி-25, பெரியநாயக்கன்பாளையம்-4, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-4, சின்கோனா-120, சின்னக்கல்லார்-116, வால்பாறை (பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம்) -97, வால்பாறை தாலுகா அலுவலகம்- 107, கோவை தெற்கு-3.