வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
வேலூர்,
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-2019-ம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை வேலூர் அண்ணாசாலையில் உள்ள டான்போஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இன்று (திங்கட்கிழமை) வட்டாரக்கல்வி அலுவலர்களின் பொதுமாறுதல், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலராக பணி மாறுதல், நாளை (செவ்வாய்க்கிழமை) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல், பதவிஉயர்வு கவுன்சிலிங், நாளைமறுநாள் (புதன்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பதவி உயர்வு, ஒன்றியத்திற்குள் பொதுமாறுதல், 14-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் பொது மாறுதல், 16-ந் தேதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
18-ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல், 19-ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள்ளும், கல்வி மாவட்டத்திற்குள்ளும், வருவாய் மாவட்டத்திற்குள்ளும் பொதுமாறுதல், 20-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (வருவாய் மாவட்டம்) பொதுமாறுதல், 21-ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் (வருவாய் மாவட்டம்) பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதேபோல அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவிஉயர்வு கலந்தாய்வு வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதன் விவரம் வருமாறு:-
நாளை (செவ்வாய்க்கிழமை) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டத்திற்குள்ளும், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல், நாளை மறுநாள் (புதன்கிழமை) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வும், 14-ந் தேதி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலும், முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவலும், 16-ந் தேதி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதலுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து 18-ந் தேதி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு, 19-ந் தேதி உடற்கல்வி, கலை, இசை, தையல் ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் பொதுமாறுதல், 20-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், 21-ந் தேதி இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.