அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் வருகிற 18-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிடுவது என்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
விருதுநகர்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளில் பல்லாயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் வேலை வாய்ப்புத்துறை, பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.354-ம், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதியமாக தினசரி ரூ.435-ம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குனர், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பலன் ஏற்படவில்லை. எனவே அரசு உத்தரவிட்டபடி உடனடியாக குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். வழங்காவிட்டால் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தினர் சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.