காங்கேயம் அருகே தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது
காங்கேயம் அருகே தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சம்பளத்தை தராததால் கொன்றதாக கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பரஞ்சேர் வழி கிராமத்தில் கல் உடைக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (வயது 25) என்பவர் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் ஒடிசாவை சேர்ந்த இவருடைய அக்காள் மகன் பிஜூ ஹம்ராம்(19), நண்பர் காளியா ஆகியோர் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சந்தோஷ் நாயக் அவருடைய அறையில் அம்மி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் நாயக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சந்தோஷ் நாயக்குடன் தங்கி இருந்த மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டதால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை பிடிக்க காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
மேலும் சந்தோஷ் நாயக்கின் அறையில் தங்கி இருந்த 2 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒடிசா தப்பி செல்லாமல் இருக்க அனைத்து ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ஒடிசா செல்லும் ரெயில்களை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து கோவை, சென்னை வழியாக ஒடிசாவுக்கு செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் அந்த ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது அந்த ரெயிலில் உள்ள பொதுப்பெட்டி கழிவறையில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த பிஜூ ஹம்ராம் என்றும், இவர் தனது தாய் மாமன் சந்தோஷ் நாயக்கை அம்மி கல்லை போட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உடனே சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசார் பிஜூஹம்ராமை காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சந்தோஷ் நாயக்கை கொலை செய்த வழக்கில் பிஜூ ஹம்ராமை காங்கேயம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைதான பிஜூ ஹம்ராம் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு.
எனது தாய் மாமா சந்தோஷ் நாயக். அவர்தான் என்னையும், காளியாவையும் வேலைக்கு அழைத்து வந்து சேர்த்து விட்டார். மாதம் தோறும் கல் உடைக்கும் ஆலை நிர்வாகத்திடம் இருந்து சந்தோஷ் நாயக், எங்களது சம்பளத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு எங்களுக்கு தருவது இல்லை. இது குறித்து பலமுறை அவரிடம் கேட்டும் சம்பளத்தை தரவில்லை. இதனால் எங்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று நாங்கள் 3 பேரும், காங்கேயத்தில் உள்ள சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கினோம். பின்னர் ஆலைக்கு திரும்பி வரும்போது மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போதும் சம்பள பணத்தை அவரிடம் கேட்டோம். அவர் சம்பள பணத்தை தரவில்லை. எனவே சந்தோஷ் நாயக்கை கொலை செய்ய முடிவு செய்து ஈரோடு மாவட்டம் சித்தோடில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் எங்களது நண்பரான ஒடிசாவை சேர்ந்த பாபு நாயக்கிடம் (22) ஆலோசனை கேட்டோம்.
அவர்தான், சந்தோஷ் நாயக் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்து விட்டு கோவை வந்துவிடுங்கள் என்றும், அங்கிருந்து உங்களை ரெயிலில் ஒடிசா அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அதன்படி சந்தோஷ் நாயக் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்து விட்டு நானும் காளியாவும் கோவை சென்றோம். அங்கு எங்களை எதிர்பார்த்து பாபு நாயக் காத்து இருந்தார். அங்கு 3 பேரும் சுற்றினோம். பின்னர் கேரளாவில் இருந்து கோவை, சென்னை வழியாக தன்பாத் வரை செல்லும் ரெயிலில் எங்களை பாபு நாயக், ஏற்றி விட்டார். இதற்கிடையில் கோவை போலீசாரிடம் பாபு நாயக் சிக்கியதால், நாங்கள் தன்பாத் ரெயிலில் ஒடிசா செல்வதை போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்படி நானும், காளியாவும் சென்னை சென்றபோது சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசார் என்னை பிடித்து காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர். காங்கேயம் போலீசார் என்னை கைது செய்தனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் காளியா தப்பி ஓடிவிட்டான். நான் போலீசில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு கைதான பிஜூ ஹம்ராம் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாபு நாயக்கிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அத்துடன் தலைமறைவாக உள்ள காளியாவை போலீசார் தேடி வருகிறார்கள். தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.