‘கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன்’ கைதான தொழிலாளி வாக்குமூலம்
‘கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன்’ என்று டிரைவர் கொலையில் கைதான தையல் தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆட்டையாம்பட்டி,
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஏரியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையுண்டவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக கடந்த மாதம் 28-ந்தேதி பரமக்குடி கோர்ட்டில் அருள் என்ற அருள்செல்வம் (வயது 35) சரண் அடைந்தார். இவரை போலீசார் காவலில் எடுத்து ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் அருள்செல்வத்தை வீரபாண்டி ஏரிக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பெருமாள் (35) என்பதும், சீரகாபாடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதன்பின்னர் அருள்செல்வம் கொடுத்த தகவலின் பேரில் ஓமலூரை அடுத்த கருப்பூரில் வசித்து வந்த பால்பாண்டி (33) என்பவரை ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் நேற்று மதியம் கைது செய்தார். போலீசில் அருள்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சீரகாபாடியில் வசித்து வந்த பெருமாள் கோவையில் செப்டிக் டேங்க் வண்டியின் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு முகேசுவரி (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பெருமாளுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவருடன் வாழப்பிடிக்காமல் முருகேசுவரி சீரகாபாடியில் குழந்தைகளுடன் வசித்தார். இந்த நிலையில் எனக்கும் முகேசுவரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
பெருமாளும், முகேசுவரியும் பிரிந்து வாழத்தொடங்கியதை அறிந்த அவரது உறவினர்கள் இரண்டு பேரையும் அழைத்து சமரசப்படுத்தினார்கள். இதனால் முகேசுவரியுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் போனது. எனவே பெருமாளை கொலை செய்தால்தான் உல்லாசமாக இருக்க முடியும் என்று நினைத்தேன். இதனால் வீரபாண்டியில் உள்ள வாடகை வீட்டுக்கு நான் பெருமாளை அழைத்து வந்தேன். அங்கு அவருக்கு மது ஊற்றிக்கொடுத்தேன். போதை அதிகமாகி மயங்கி கிடந்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
அதன்பிறகு பெருமாளின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டேன். இதற்கு துணையாக பால்பாண்டியை அழைத்து வந்தேன். பெருமாளின் உடலில் கல்லை கட்டி வீரபாண்டி ஏரியில் வீசி விட்டு நாங்கள் சென்று விட்டோம். பின்னர் 2 பேரும் தலைமறைவாகி விட்டோம். போலீசார் சந்தேகம் அடைந்து தேடுவதை அறிந்ததும் நான் பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தேன். மேற்கண்டவாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான பால்பாண்டியின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் ஆகும். அருள்செல்வம் பரமக்குடியைச் சேர்ந்தவர். அருள்செல்வமும், பால்பாண்டியும் தையல் வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.