தொடர் மழை எதிரொலி கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழை எதிரொலி காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன்படி ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு 735 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் முழுகொள்ளளவான 44.28 அடியில் தற்போது 42.80 அடி வரையில் தண்ணீர் உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியில் பெய்த மழையாலும் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
எச்சரிக்கை
அதன்படி நேற்றைய நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு 1,150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 42 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 35.35 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.