ஊதிய உயர்வு வழங்க கோரி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்க கோரி திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,
திருவாரூர் பஸ் நிலையம் அருகில், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன்் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட செயலாளர் சக்திவேல், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கர், மதுரை மண்டல பொதுக்குழு உறுப்பினர் வள்ளல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் கலையமுதன் நன்றி கூறினார்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வருடாந்திர ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை உடனுக்குடன் சரி செய்து மக்களுக்கான சேவை தடைபடாமல் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.
ஈட்டிய விடுப்புக்கான பணத்தை தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும். தொழிலாளர் சம்பளம், வாகன பராமரிப்பு போன்ற பல்வேறு வகையில் முறைகேடுகளை தடுத்திட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.