வாடகை பணம் கேட்ட தகராறில் வீட்டு உரிமையாளரை கத்தியால் தாக்கிய 2 பேர் கைது

வாடகை பணம் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரை கத்தியால் தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-06-06 22:00 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 36). இவரது வீட்டில் அருண்குமார்(30), ரூபன்பாபு(38) ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இவர்களிடம் தாமோதரன் வாடகை பணம் கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து வீட்டின் உரிமையாளரான தாமோதரனை கத்தியால் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த தாமோதரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், ரூபன்பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 அடி நீளமுள்ள கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்