2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு கும்பல் தலைவன் கோர்ட்டில் சரண், கோவை சிறையில் அடைப்பு
2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த கும்பல் தலைவன் சுந்தர் கோவை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். நீதிபதி உத்தரவின்பேரில் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.;
கோவை,
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு பிடித்து 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை ஒரு கும்பல் அச்சடித்து வந்தது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (வயது31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அறையில் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாக கைப்பற்றப்பட்டன.
மேலும் கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கலர்ஜெராக்ஸ் எந்திரம், கம்ப்யூட்டர், கள்ள நோட்டுகளை கத்தரிக்கும் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆனந்திடம் நடத்திய விசாரணையில் காரமடை நால்ரோட்டை சேர்ந்த சுந்தர் (38), கோவை வடவள்ளியில் வசித்து வந்த கிதர் முகமது (65) ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்தது தெரிய வந்தது.
கள்ள நோட்டு வழக்கில் போலீஸ் தேடி வந்த கிதர்முகமதுவை கோவை-கேரள எல்லைப்பகுதியான ஆனைக்கட்டி பகுதியில் கடந்த 4-ந்தேதி போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கள்ளநோட்டு வழக்குகளில் பலமுறை கைதான கிதர்முகமதுவிடம், கும்பலின் தலைவனாக செயல்பட்ட சுந்தர் தொடர்பான தகவல்களை கேட்டு தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கள்ளநோட்டுகளை அச்சடித்து பல மாநிலங்களில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. கள்ளநோட்டுகளை அச்சடிக்க மூளையாக சுந்தர் செயல்பட்டதும், கள்ளநோட்டுகளை அசல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு போல் ஸ்கேன் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதை கலர் ஜெராக்ஸ்களாக பிரிண்ட் எடுத்து கோடிக்கணக்கில் புழக்கத்தில் விட்ட தகவலும் வெளியானது. கைதான கிதர்முகமது நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கள்ளநோட்டு கும்பல் தலைவன் சுந்தர், கோவை 7-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாண்டி முன்னிலையில் நேற்று மாலை சரண்அடைந்தார். அவரை வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுந்தர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சுந்தர் சரண் அடைந்ததால் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ள னர். கள்ளநோட்டு தொடர்பான முழு விவரங்களும் சுந்தர் மூலம்தான் தெரியவரும் என்பதால், கோர்ட்டில் ஒருசில நாட்களில் மனுதாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.