நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதியளித்தனர்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி இயற்கை எழில் சூழ மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப் பகுதியில் இருந்தும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்தும் நீர் வரத்து காணப்படும்.
ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்துவிட்டு செல்வார்கள். இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
இந்தநிலையில் அருவிப்பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் வழக் கத்தை விட நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை அருவிப்பகுதியில் நீர்வரத்து சீராக விழுந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். அருவிக்கு வந்த சுற்றுலாபயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து சென்றனர். கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.