விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் மலேசிய பெண்ணிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மலேசிய பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்துக்கு தனியார் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த மஜ்துனிசா பானு என்பவர் தனது உடலில் தங்க சங்கிலிகள், வளையல்கள், கை சங்கிலிகளை அதிகளவில் அணிந்து வந்தார். இது, அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவரிடம், அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்திய போது அந்த நகைகள் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அதன் பேரில் அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த நகைகள் அனைத்தும் 1,299 கிராம் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த பெண்ணிடம் அதி காரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் விமானத்தில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.