வேலூர் அருகே காதல் ஜோடி விபத்தில் பலி
வேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திரும்பிய காதல் ஜோடி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் நெமிலியை அடுத்த வடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் சரத்குமார் (வயது 20), ஆட்டுப்பாக்கத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். நெமிலியை அடுத்த அசநெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவரது மகள் ஜெயபிரதா (20), இவரும் அதே கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்ததால் அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசி பழகியுள்ளனர். பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் சோளிங்கர் அருகே நடந்த கோவில் திருவிழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பாணாவரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு சிறுபாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. மேலும் அங்கு சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு இருந்தன. மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சரத்குமார் திடீரென நிலை தடுமாறி ஜல்லிக்கற்கள் மீது மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜெயபிரதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார் பள்ளத்தில் விழுந்தார். அப்போது அதில் இருந்த கம்பிகளில் குத்தி அவரும் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.