ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குருசாமியாபுரத்தில் வாறுகால் வசதி அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குருசாமியாபுரத்தில் வாறுகால் வசதி அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-06 21:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம் கரிசல்குளத்திற்கு அருகே உள்ள குருசாமியாபுரத்தில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்கு முன்பாக குளம் போல் தேங்கியுள்ளதால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் தங்களின் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலில் சேறும் சகதியுமாக செல்லும் அவலம் உள்ளது. சிறு குழந்தைகள் அவ்வழியாக செல்லும் போது வழுக்கி கழிவு நீரில் விழும் நிலை உள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு சில வாறுகால்களும் உடைந்து கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியே கிடக்கிறது.

கழிவு நீர் பாலங்களும் உடைந்து காணப்படுகின்றன. பல முறை சம்பந்தபட்ட துறையினரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி அமைத்து தரவும், உடைந்து போயுள்ள வாறுகாலையும், கழிவு நீர் பாலங்களையும் போர்க்கால அடிப்படையில் சீரமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்