16–வது நாளாக வேலை நிறுத்தம்: கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பதிவு தபால்கள் தேக்கம்
16–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராம தபால் ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலை நிறுத்தம் காரணமாக பதிவு தபால்கள் தேங்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்,
கிராமிய தபால் ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவுக்காக கமலேஷ் சந்திரா தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி அளித்த பரிந்துரையை மத்தியஅரசு அமல்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக தபால் துறையில் தற்காலிகமாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடை தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் அகில இந்திய கிராமிய தபால் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
16–வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் அரசு, ஸ்ரீதரன், கருப்புசாமி, முனியகுமரன், தசரதன், மருதையன், பால்ராஜ், புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சை கோட்டத்தில் தஞ்சை, பாபநாசம், மன்னார்குடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 235 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு பணி புரியும் 570 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பதிவு தபால், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை, ஏ.டி.எம். கார்டு போன்றவை கிளை தபால் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன. இதனால் கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.