உல்லாஸ்நகர் ஆகாய நடைபாதையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

உல்லாஸ்நகர் ஆகாய நடைபாதையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-05 22:45 GMT
அம்பர்நாத்,

உல்லாஸ்நகர் ஆகாய நடைபாதையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழிப்பறி

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் சுபாஷ்தேக்டி பகுதியை சே்ாந்த மகேஷ் போஸ்லே என்பவர் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு அங்குள்ள ஆகாய நடைபாதை வழியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்து கொண்டு ஓடி விட்டனர். இதே போல மறுநாள் சுபாஷ் பாட்டீல் என்பவரிடமும் அந்த ஆசாமிகள் ரூ.9,500 பறித்துள்ளனர்.

2 பேர் கைது

இது தொடர்பாக இருவரும் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகள் இருவரையும் பிடிக்க அங்கு தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஆகாய நடைபாதையில் நின்று கொண்டிருந்த வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இரண்டு வாலிபர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதில் ஒருவர் பெயர் சாருக்கான் (வயது18) என்பதும், மற்றொருவர் 18 வயதுக்குப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்