மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ஓவர்ஹெட் மின்கம்பி அறுந்து ரெயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ஓவர்ஹெட் மின்கம்பி அறுந்து ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2018-06-05 22:45 GMT
மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ஓவர்ஹெட் மின்கம்பி அறுந்து ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஓவர்ஹெட் மின்கம்பி அறுந்தது

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள கல்யாண் - கசாரா ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மதியம் 1.15 மணியளவில் மின்சார ரெயிலுக்கு மின்சப்ளை கொடுக்கும் ஓவர்ஹெட் மின்கம்பி அறுந்தது. இதன் காரணமாக கல்யாணில் இருந்து கசாரா நோக்கி வந்த மின்சார ரெயில் நடுவழியில் நின்றது.

அந்த ரெயிலின் பின்னால் வந்த ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பயணிகள் அவதி

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து ஓவர்ஹெட் மின்கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு ஓவர்ஹெட் மின்கம்பி சரி செய்யப்பட்டது. இதற்கிடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஓவர்ஹெட் மின்கம்பி சரி செய்யப்பட்ட பின்னர் கல்யாண் - கசாரா இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக மெயின் வழித்தடத்தில் ரெயில்கள் மிகவும் தாமதமாக இயங்கின.

மேலும் செய்திகள்