சங்ககிரி அருகே உயர்கோபுர மின்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
சங்ககிரி அருகே உயர்கோபுர மின்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சங்ககிரி,
சங்ககிரி தாலுகாவுக்கு உட்பட்ட தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் சுண்ணாம்பு குட்டை, கள்ளுக்கடை, ஊஞ்சானூரான்காடு, கலியனூர், சின்னாகவுண்டனூர் ஆகிய கிராமங்கள் விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். இந்த கிராமங்களின் வழியாக பவர்கிரிட் கார்ப்பரேஷன் எனப்படும் அரசு நிறுவனத்தின் சார்பில் சிறு,குறு விவசாயிகளின் நிலத்தில் உயர்கோபுர மின்பாதை அமைக்க நிலஅளவீடு(சர்வே) பணி நடைபெற்று வந்தது.
இதற்கு கள்ளுக்கடை பகுதி பொதுமக்கள் சர்வே பணி செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் சங்ககிரி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர்.
மனு கொடுத்தனர்
அங்கு அவர்கள் எங்கள் விவசாய நிலத்தில் உயர்கோபுர மின்பாதை அமைக்கக்கூடாது எனவும், எங்கள் விவசாய நிலத்தில் மின்பாதை அமைக்க விட மாட்டோம் எனவும் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் அருள்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விவசாயிகளுடன் பாட்டாளி மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் சத்திரியன் சாமிநாதன், மாவட்ட துணைத்தலைவர் பழனிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க தலைவர் பெருமாள் உள்ளிட்ட கட்சியினரும் உடன் வந்து இது தொடர்பாக தாசில்தார் அருள்குமாரிடம் முறையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.