அரசு பெண்கள் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர 1,998 பேர் விண்ணப்பம் கலந்தாய்வு தொடங்கியது

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர 1,998 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.;

Update: 2018-06-05 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல்-திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.ஏ.தமிழ், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல், பி.காம்., பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுபாட்டியல் என 13 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இவற்றில் 940 இடங்கள் உள்ளன.

இவற்றில் 2018-19-ம் கல்வியாண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் பெறப்பட்டன. மொத்தம் 1,998 மாணவிகள் விண்ணப்பம் செய்தனர்.

நேற்று முன்தினம் அனைத்து பாடங்களுக்கும் விளையாட்டு வீரர்களின் மகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மகள் மற்றும் என்.சி.சி., இட ஒதுக்கீடுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடந்தது.

நேற்று பிளஸ்-2 தேர்வில் முக்கிய பாடங்களில் 500 முதல் 800 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினிஅறிவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் பாடபிரிவுக்கு விண்ணப்பம் செய்த மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி தலைமை தாங்கினார்.

இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நேற்று காலை முதலே ஏராளமான மாணவிகள் பெற்றோருடன் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் நடந்த கலந்தாய்வில் மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்த பேராசிரியைகள், அவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான ஆணைகளை வழங்கினர்.

நாளை (வியாழக்கிழமை) பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் பி.ஏ. தமிழ் இலக்கியம் பாடபிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இதில் சிறப்புத் தமிழ் அல்லது குறிப்பிட்ட மொழிப்பாடங்களில் 200-க்கு 200 முதல் 140 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் கலந்து கொள்ளலாம் எனவும், மேலும் பி.காம்., வணிகவியல், பி.ஏ., வரலாறு மற்றும் பி.ஏ. பொருளாதாரம் பாடப்பிரிவுக்கு முக்கிய பாடங்களில் 500 முதல் 800 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கும் நாளை கலந்தாய்வு நடக்கிறது எனவும் கல்லூரி பேராசிரியைகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்