பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்குவோம் மாவட்ட நீதிபதி இளங்கோவன் பேட்டி

‘பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்குவோம்’ என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்தார்.;

Update: 2018-06-05 21:30 GMT

தூத்துக்குடி,

‘பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்குவோம்’ என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்தார்.

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வனத்துறை இணைந்து சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியை நேற்று காலையில் கோர்ட்டு வளாகத்தில் நடத்தின. நிகழ்ச்சியையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தலைமை தாங்கி, கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். அப்போது, பாதாம், கொன்றை, புங்கை, பூவரசு ஆகிய மரக்கன்றுகளை அவர் நட்டினார்.

பின்னர் அவர் கூறும் போது, ‘சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நடக்கிறது. பிளாஸ்டிக்கை அனைவரும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக் இல்லாத உலகை உருவாக்குவோம். அதே போன்று அமைதியான சூழல், சுத்தமான காற்று கிடைக்கும் வகையில் அதிக மரக்கன்றுகளை நட வேண்டும். அதன்படி கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன’ என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் 2–வது கூடுதல் அமர்வு நீதிபதி கவுதமன், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சாமுவேல்பெஞ்சமின், முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை, 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பிஸ்மிதா, 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி, வனச்சரகர் விமல்குமார், வனவர் மகேஷ், வக்கீல் சங்க இடைக்காலக்குழு தலைவர் திலக், வக்கீல்கள் சொக்கலிங்கம், சுப்பிரமணிய ஆதித்தன், அதிசயகுமார், அரசு போக்குவரத்து கழக வக்கீல் ஜெயம்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்