வீட்டில் மரக்கன்றுகளை நட்டு குடும்ப உறுப்பினர்களை போல் பராமரிக்க வேண்டும் நீதிபதி பேச்சு
ஒவ்வொருவரும் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு குடும்ப உறுப்பினர்களை போல் பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு பேசினார்.
திருச்சி,
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகரை பசுமையாக்கும் திட்ட தொடக்க விழா மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகர பொறியாளர் அமுதவள்ளி வரவேற்றார். ஹலோ எப்.எம். டைரி சஹா சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு மரக்கன்றுகளை வழங்கி பேசுகையில், “உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரியமங்கலம் குப்பை கிடங்கில் பலமுறை தீப்பிடித்து எரிந்தது. தற்போது மாநகராட்சி நுண் உரக்கிடங்கு அமைத்து செயல்படுத்துவதன் மூலம் தீ விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது சுற்றுச்சூழல் தான். எனவே ஒவ்வொருவரும் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு, அதை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் பராமரிக்க வேண்டும். திருச்சி மாநகரை தூய்மையாக வைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து குறும்படங்கள் திரையிட வேண்டும்” என்று பேசினார்.
மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசும்போது, “மாநகராட்சியில் ஒரு வார்டில் உள்ள 100 வீடுகளுக்கு 1 மரம் வீதம் 65 வார்டுகளுக்கு 6,500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை 26 இடங்களில் செயல்பட்டு வரும் நுண்ணுரம் செயலாக்க மையங்களுக்கு கொண்டு சென்று அங்கு தினமும் 150 டன் உரம் பிரித்து எடுக்கப்படுகிறது. இவை 15 நாட்களில் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம் மற்றும் விறகுபேட்டையில் நர்சரி கார்டன்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்க இரு குப்பை தொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு செய்யும் பள்ளிகளில் 3 மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும். மரக்கன்றுகள் நடும் திட்டம் பொதுமக்கள் இயக்கமாக மாற வேண்டும். மாநகராட்சியில் மேலும் 20 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்” என்று பேசினார்.
விழாவில் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர்நல அலுவலர் டாக்டர் சித்ரா, செயற்பொறியாளர் செல்வம், உதவிஆணையர்கள் வைத்தியநாதன், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆணையர் தயாநிதி நன்றி கூறினார்.
இதனை தொடர்ந்து திருச்சி கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு மரக்கன்றுகளை நட்டார்.