பார்வையற்றவர்களுக்கான ஸ்மார்ட் வழிகாட்டி கருவி

உலகம் முழுவதும் 25 கோடிக்கும் அதிகமான பார்வையற்றவர்கள் உள்ளனர்.

Update: 2018-06-05 06:25 GMT
பார்வையற்றவர்கள்  பயன்பெறும் வகையில் துருக்கியை சேர்ந்த ‘யங் குரு’ அகாடமி நிறுவனம் உருவாக்கி உள்ள ‘வீவாக்’ (weWALK) எனப்படும் நடைபயண கருவி இது. தற்போது பயன்படுத்தும் பயண குச்சிகளின் ஸ்மார்ட் வடிவம் இது. இதில் உள்ள பொத்தானை ஆன் செய்து வைத்துக் கொண்டால் நடைபாதையின் குறுக்கே உள்ள தடைகளை ஒலியலைகளை அனுப்பி தெரிந்து கொண்டு எச்சரிக்கை செய்யும்.

உடனே அதில் உள்ள வேறு பொத்தான்களை அழுத்தி எந்தப் பக்கமாக நகர்ந்து சென்றால் இடையூறு இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். லேசான பார்வைத்திறன் கொண்டவர்களுக்கு சிறிய எல்.இ.டி. திரையில் தடையின் வடிவம் தொட்டு உணரும் படமாக காண்பிக்கப்படும்.

புளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனுடன் இணைத்தும் இதை பயன்படுத்தலாம். கூகுள் மேம்புடன் இணைத்துக் கொண்டு, ஸ்பீக்கர் வசதி யுடன் வழித் தடத்தை கேட்டு அறிந்து கொண்டும் பயணிக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் பயன்படுத்த முடியும். இதன் விலை 349 அமெரிக்க டாலர்களாகும். 

மேலும் செய்திகள்