பட்டதாரி என்ஜினீயர்களுக்கு அதிகாரி பணி

மத்திய அரசு நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர்களுக்கு அதிகாரி வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. 141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-06-05 05:59 GMT
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் (இ.ஐ.எல்.). தற்போது இந்த நிறுவனத்தில், துணை பொது மேலாளர், துணை மேலாளர், ஸ்டோர் அதிகாரி, பொறியாளர், இளநிலை கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் துணை மேலாளர் பணிக்கு 71 இடங்களும், என்ஜினீயர் பணிக்கு 59 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30-5-2018-ந் தேதியில் 28 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 47 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும், பி.காம் உள்ளிட்ட பட்டப்படிப்பு மற்றும் இதர டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-6-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.engineersindia.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்