கணித ஆசிரியையை கண்டித்து நடுநிலைப்பள்ளிக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்
கணித ஆசிரியையை கண்டித்து முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர்.
நச்சலூர்,
தோகைமலை ஒன்றியம் முதலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதி மாணவ- மாணவிகள் பலர் படிக்கின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியையின் நடவடிக்கைகளை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், முதலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி வரதராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளிக்கு போடப்பட்டு இருந்த பூட்டை திறந்து விட்டனர்.
பரபரப்பு
பின்னர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றனர். இதையடுத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் கபீர் மற்றும் தோகைமலை வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் மீனாவிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி கணித ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.