கலெக்டர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், சங்கரன்கோவில் வட்டார செயலாளர் குருசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் தற்போது புதிதாக கல்குவாரி அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த கல்குவாரி அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்படும். எனவே அங்கு கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மேலப்பாளையம் அசோகாபுரம் ஊர்மக்கள், தங்கள் கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் இல்லை எனில் வருகிற 8-ந் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.