ஓடும் ரெயிலில் சென்னை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு டிக்கெட் பரிசோதகர் கைது
ஓடும் ரெயிலில் சென்னை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை,
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தம்பதியினர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் கோவை வந்த அவர்கள், அங்கிருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். அந்த ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது, டிக்கெட் பரிசோதகர் கோவை போத்தனூரை சேர்ந்த அனீஷ்குமார் (வயது 25) என்பவர் அந்த தம்பதியினரின் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். தூங்கிக்கொண்டிருந்த சிறுமி அலறியடித்து எழுந்து கூச்சலிட்டாள். அவளது அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் சக பயணிகள் டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்ததும் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனீஷ்குமாரை கைது செய்தனர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அனீஷ்குமார் 3 ஆண்டுகளாக டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.