31 கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த 3 பேர் கைது ரூ.50 லட்சம் பொருட்கள் மீட்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த 3 பேரை சினிமா பாணியில் போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
சென்னை,
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள செல்போன் கடையில் கடந்த மாதம் (மே) 12-ந் தேதி ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது. கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருந்தனர்.
இதே பாணியில் கடந்த மாதம் 30-ந் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் ரூ.67 ஆயிரம் கொள்ளை போனது. இந்தநிலையில் அண்ணாநகர், தாம்பரம் சேலைவாயல் என சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்தடுத்து 29 கடைகளில் ஷட்டரை உடைத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் வெள்ளி பொருட்கள், டி.வி. போன்ற மின்சாதனப்பொருட்கள் கொள்ளை போயின.
கொள்ளை கும்பலை கைது செய்யும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் அறிவுரைப்படி இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் சரவணன் ஆகியோரது ஆலோசனையின் பேரில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம், இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருட்டு நடந்த கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும், அதில் பதிவாகி இருந்த காட்சிகள் அடங்கிய கருவிகளை கொள்ளை கும்பல் உஷாராக எடுத்து சென்றுவிட்டது. இதனால் கொள்ளை கும்பலை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு முதலில் சிக்கல் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடைகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது கார், ஆட்டோ மூலம் கொள்ளை கும்பல் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வாகனத்தின் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாகனங்களும் திருட்டு வாகனங்கள் என்பது தெரியவந்தது.
செங்குன்றத்தில் இருந்து கார் திருடப்பட்டதும், அந்த வீட்டில் பாதுகாப்புக்கு வளர்க்கப்பட்ட நாயை விஷ மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதுதொடர் பாகவும் போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினர்.
இதற்கிடையே கொள்ளை கும்பலின் நடமாட்டத்தை ரகசியமாக போலீசார் கண் காணித்தனர். இந்தநிலையில் கொள்ளையர்கள் செந்தில்நகரில் இருந்து மயிலாப்பூர் நோக்கி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில் கார், ஆட்டோ மூலம் கொள்ளையர்கள் வந்த போது போலீசார் மடக்கினர். அப்போது கொள்ளையர்கள் தப்பி ஓட முயன்றனர். சினிமா பாணியில் போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள் கொளத்தூர் ராமதாஸ் தெருவை சேர்ந்த சையத் சர்பராஸ் நவாஸ் (வயது 36), அவருடைய உறவினர் செரின் (30), கொரட்டூர் பிராமின் தெருவை சேர்ந்த ராஜா (33) என்பது தெரியவந்தது.
பகல் வேலையில் கடைகளை நோட்டமிட்டு, அதிகாலையில் 31 கடைகளில் கைவரிசை காட்டி உள்ளனர். திருட்டு சம்பவங்களுக்கு சையத் சர்பராஸ் நவாஸ் மூளையாக செயல்பட்டுள்ளார். இவர் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. 7 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்று வந்துள்ளார்.
கொள்ளையடித்த பொருட்களை சையத் சர்பராஸ் நவாஸ் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவருடைய வீட்டில் இருந்து 10 கிலோ வெள்ளி பொருட்கள், 820 கைக்கெடிகாரங்கள், 6 எல்.இ.டி. டி.வி.க்கள், 2 கார்கள் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்க பயன்படுத்திய வெல்டிங் எந்திரம், கடப்பாரை, முகமூடி, கையுறை போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
கொள்ளையடித்த பொருட் களில் எவ்வளவு பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல லட்சம் செலவு செய்து கடைகள் அமைக்கும் வணிகர்கள் கடையின் ஷட்டரை தரமாக அமைக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு ஆகியோர் வெகுமதி வழங்கி நேற்று பாராட்டு தெரிவித்தனர்.