தென்னைநார் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
உடுமலை அருகே தென்னை நார் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தேங்காய் மட்டைகள் மற்றும் நார் எரிந்து நாசமானது.
உடுமலை,
உடுமலை அருகில் உள்ளது மடத்தூர். இங்கு பாபு என்பவர் தென்னை நார் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலை வளாகத்தில் திறந்தவெளியில் தேங்காய் மட்டைகள் மற்றும் தென்னை நார் ஆகியவை குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று மதியம் தென்னை நார் மற்றும் தேங்காய் மட்டையில் திடீரென்று தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. உடனே அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ஊழியர்கள் ஓடி வந்து குடங்களில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் தென்னை நார் மற்றும் தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ அணைக்கப்பட்டதால் மற்றொரு பகுதியில் இருந்த தென்னை நார் மற்றும் மட்டைகள் தீ விபத்தில் இருந்து தப்பின. ஆனால் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்திற்கு காரணம் தொழிற்சாலை முன்பு தேங்காய் நார் கொட்டிக்கிடந்ததற்கு மேல் மின் கம்பிகள் செல்கின்றன. அந்த மின் கம்பிகள் காற்றில் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி பறந்து தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.