ஈரோட்டில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மளிகை கடைக்காரருக்கு வலைவீச்சு
ஈரோட்டில், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மளிகை கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கபழம். இவருடைய மகன் அலெக்ஸ் (வயது 28). இவர் ஈரோடு சூரம்பட்டி காமராஜர் விதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் குழந்தைகளுக்கு மிட்டாய், பிஸ்கெட் கொடுத்து கடைக்குள் அழைத்துச்சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அலெக்சை கண்டித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். அப்போது அலெக்ஸ் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சிறுமியின் பெற்றோர் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரை அழைத்துக்கொண்டு அலெக்சின் கடைக்கு வந்துள்ளார். இதற்கிடையே அலெக்ஸ் கடையை பூட்டாமல் அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் திறந்து கிடந்த அலெக்சின் கடையை பூட்டு போட்டு பூட்டிச்சென்றனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய அலெக்சை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சூரம்பட்டி பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.