கர்நாடக மேல்–சபை தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ள 11 பேரும் போட்டியின்றி தேர்வு: இன்று அறிவிப்பு வெளியாகிறது
கர்நாடக மேல்–சபை தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ள 11 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு இன்று(திங்கட்கிழமை) வெளியாகிறது.
பெங்களூரு,
கர்நாடக மேல்–சபை தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ள 11 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு இன்று(திங்கட்கிழமை) வெளியாகிறது.
11 பேரும் போட்டியின்றி தேர்வுகர்நாடக மேல்–சபையில் காலியாகும் 11 இடங்களுக்கு வருகிற 11–ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எம்.எல்.ஏ.க்கள் மூலம் அந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த மாதம்(மே) 31–ந் தேதி கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் பா.ஜனதா சார்பில் தேஜஸ்வினிகவுடா, கே.பி.நஞ்சுண்டி, ருத்தேகவுடா, ரகுநாத் மல்காபுரே, ரவிக்குமார் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சி.எம்.இப்ராகிம், கோவிந்தராஜூ, அரவிந்த்குமார் அரளி, ஹரீஷ்குமார் ஆகியோரும், ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் பி.எம்.பாருக், தர்மேகவுடா ஆகியோரும் என மொத்தம் 11 பேர் மனு தாக்கல் செய்தனர்.
அதாவது 11 இடங்களுக்கு 11 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற இன்று(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். யாரும் மனுவை வாபஸ் பெறாவிட்டால், மாலையில் 11 பேரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
சட்டசபையில் உள்ள பலத்தின்...கர்நாடக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில், பா.ஜனதா சார்பில் 5 பேரையும், காங்கிரஸ் சார்பில் 4 பேரையும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 2 பேரையும் தேர்ந்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.