குமாரசாமி 5 ஆண்டுகள் முதல்–மந்திரி: எனக்கு அதிருப்தி என வெளியான தகவல் தவறானவை மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

குமாரசாமி 5 ஆண்டுகள் முதல்–மந்திரி பதவியில் நீடிப்பது குறித்த வி‌ஷயத்தில் எனக்கு அதிருப்தி என வெளியான தகவல் தவறானவை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Update: 2018-06-03 22:00 GMT

பெங்களூரு,

குமாரசாமி 5 ஆண்டுகள் முதல்–மந்திரி பதவியில் நீடிப்பது குறித்த வி‌ஷயத்தில் எனக்கு அதிருப்தி என வெளியான தகவல் தவறானவை என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

அதிருப்தி இல்லை

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்–மந்திரி பதவியில் குமாரசாமி 5 ஆண்டுகள் நீடிப்பார் என்று காங்கிரஸ் அறிவித்துவிட்டது. இதனால் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை அவர் மறுத்துள்ளார். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைக்க எங்கள் கட்சி மேலிடம் முடிவு எடுத்தது. மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுகிறோம். முதல்–மந்திரி பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 5 ஆண்டுகள் காலம் விட்டுக் கொடுத்த வி‌ஷயத்தில் எனக்கு எந்த கருத்து வேறுபாடோ அல்லது அதிருப்தியோ இல்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் தவறானவை.

நாங்கள் ஆதரிக்கிறோம்

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை எஸ்.ஆர்.பட்டீல் ராஜினாமா செய்துள்ளார். பிரச்சினைகள் இருந்தால் கட்சியில் உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதை செய்வோம். எங்கள் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

மேலும் செய்திகள்