7 ஆண்டுகளில் 21,712 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன - கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 712 பசுமை வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-03 23:30 GMT
வேலூர்,

7 ஆண்டுகளில் 21,712 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரூ.349.27 கோடி மதிப்பில் 19 ஆயிரத்து 404 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இதில் திருப்பத்தூர் தொகுதியில் 1989 வீடுகள், ஜோலார்பேட்டை தொகுதியில் 2392 வீடுகள், வாணியம்பாடி தொகுதியில் 1583 வீடுகள், ஆம்பூர் தொகுதியில் 1413 வீடுகள், குடியாத்தம் தொகுதியில் 1201 வீடுகள், அணைக்கட்டு தொகுதியில் 1223 வீடுகள், காட்பாடி தொகுதியில் 1291 வீடுகள், கே.வி.குப்பம் தொகுதியில் 1383 வீடுகள், வேலூர் தொகுதியில் 36 வீடுகள், ஆற்காடு தொகுதியில் 1933 வீடுகள், ராணிப்பேட்டை தொகுதியில் 1281 வீடுகள், சோளிங்கர் தொகுதியில் 2087 வீடுகள், அரக்கோணம் தொகுதியில் 1592 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 2016-17ம் ஆண்டில் இதர வகுப்பினருக்கு 810 வீடுகளும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 336 வீடுகளும், வழங்குடியினர் பிரிவினருக்கு 10 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. 2017-18-ம் ஆண்டில் இதர வகுப்பினருக்கு 807 வீடுகளும், ஆதி திராவிடர் பிரிவினருக்கு 335 வீடுகளும், பழங் குடியினருக்கு 10 வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 21,712 பசுமை வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.

2018-2019-ம் நிதியாண்டில் 1221 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்