விமான நிலையத்தில் டார்ச் லைட்டில் மறைத்து பயணி கடத்தி வந்த ரூ.24 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் டார்ச் லைட்டில் மறைத்து பயணி கடத்தி வந்த ரூ.24 லட்சம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2018-06-03 23:00 GMT
செம்பட்டு,

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.

அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த சாகுல் அமீது என்பவருடைய உடைமைகளை சோதனை செய்தபோது, டார்ச் லைட்டில் 780 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.24 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து, சாகுல்அமீதுவிடம் விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னையை சேர்ந்த அருண் என்பவர் கடத்தி வந்த ரூ.2¼ லட்சம் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்