மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு

ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபால்(வயது 27). இவர் கடந்த மாதம் 29-ந் தேதி இரவு அய்யம்பாளையத்திலிருந்து ஜெகதாபி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

Update: 2018-06-03 22:15 GMT
வெள்ளியணை,

ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபால்(வயது 27). இவர் கடந்த மாதம் 29-ந் தேதி இரவு அய்யம்பாளையத்திலிருந்து ஜெகதாபி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடவூர் ஒன்றியம் மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி கள்ளப்பொம்மன்பட்டியை சேர்ந்த மருதை(35) என்பவர் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கோபால் மற்றும் மருதை இருவரும் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கோபால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருதை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்