மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 51 பேருக்கு தேசிய அடையாள அட்டை
கரூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 51 பேருக்கு தேசிய அடையாள அட்டையினை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.;
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர்.
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்கும் முகாம் நடைபெற்றது. எலும்பு முறிவு பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர், காது கேளாதவர் சிறப்பு மருத்துவர், கண் சிறப்பு மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து மருத்துவ சான்று வழங்கினார்கள். அதன் பிறகு 51 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 10 பேருக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் 2 பேருக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட நடைதாங்கியும், 2 பேருக்கு முழங்கை ஊன்றுகோலும் வழங்கப்பட்டது.
இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பேசுகையில், உடலாலும், உள்ளத்தாலும் வளம் குன்றியோர்களான மாற்றுத்திறனாளிகளின் நலன் காப்பதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் கலியமூர்த்தி மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வராஜ், கரூர் நகர வங்கி தலைவர் ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.