சேடபட்டி அருகே 18 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
சேடபட்டி அருகே 18 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
பேரையூர்,
சேடபட்டி போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் மற்றும் போலீசார்கள் கஞ்சா தடுப்பு சம்பந்தமாக உசிலம்பட்டி–பேரையூர் சாலையில் உள்ள பெருங்காமநல்லூர் விலக்கு பகுதியில் சோதனை செய்தனர். அதில் பெரியகட்டளையை சேர்ந்த ஒச்சாத்தேவர் (வயது 55), தங்கபாண்டி, கணவாய்பட்டியை சேர்ந்த செல்லத்துரை ஆகியோர் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒச்சாத்தேவரை கைது செய்தனர். தப்பி ஓடிய செல்லத்துரை, தங்கப்பாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.