கணவன் கொடுமைப்படுத்தியதால் பெண் தற்கொலை

கணவன் கொடுமைப்படுத்தியதால் பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-03 21:45 GMT

பரமக்குடி,

பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜோதிமணி(வயது 45). இவர் கடந்த மார்ச் மாதம் குடும்ப பிரச்சினை காரணமாக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவருடைய மகன் சிவக்குமார் வீட்டில் இருந்து ஒரு கடிதம் எடுத்துள்ளார். அதில் தனது சாவிற்கு கணவன் கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்று ஜோதிமணி எழுதி வைத்திருந்தாராம். உடனே சிவகுமார் அந்த கடிதத்தை வைத்து பரமக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி ஜோதிமணியின் கணவர் மீது பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்