கழுகுமலை அருகே சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் அமைச்சர் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம்

கழுகுமலை அருகே சென்றாய பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-06-03 20:45 GMT

கழுகுமலை,

கழுகுமலை அருகே சென்றாய பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே வேலாயுதபுரத்தில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1–ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரங்களும், சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று காலை யாகசாலை பூஜையை தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளங்களுடன் புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. காலை 11 மணிக்கு கோபுர விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவையொட்டி பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) கும்மியாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் செய்திகள்